ஐதராபாத்தில் புதிய தகவல் மையம் அமைக்கிறது இஸ்ரோ

ஐதராபாத்:

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விரைவில் ஐதராபாத்தில் தகவல் மையம் அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் கிரண்குமார் கூறினார்.


இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”இந்த மையத்தின் மூலம் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் பயன்பெறுவார்கள். புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளம் தொழில் முனைவோர் நல்ல ஆலோசனைகளை செயல் அளவில் மாற்றி சிறந்த பொருட்களை உருவாக்கலாம்” என்று கூறினார்.

மேலும், ‘‘தற்போது இஸ்ரோ தனது செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள மையங்களில் சேமித்து வைத்துள்ளது. இதனால் இத்தகவல்களை பயன்படுத்துவோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அனைத்துத் தகவல்களும் ஐதராபாத் மையம் திறக்கப்பட்டப் பிறகு ஒரே இடத்தில் கிடைக்கும்’’ என்று கிரண்குமார் தெரிவித்தார்.