வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-7ஏ செயற்கைகோள்

ஸ்ரீஹரிகோட்டா:

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு பயன்படும் வகையில் தயாரிக்கப் பட்ட தகவல் தொடர்பு செயற்கை கோளான ஜிசாட் 7ஏ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சரியாக இன்று மாலை  4.10 மணிக்கு ஜிஎஸ்எல்வி-எஃப்11 ராக்கெட் மூலம், ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து  வெற்றிகரமாக விண்ணில் பறந்தது.

சுமார்  2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளான  ஜிசாட் 7ஏ, இந்தியாவின் 35வது தகவல் தொடர்புக் கான செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் ஆயுட் காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

இந்த செயற்கைக் கோள் 70 சதவீதம் அளவுக்கு விமானப் படைக்கும் 30 சதவீதம் அளவுக்கு ராணுவ தேவைகளுக்கான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட உள்ளது.