எந்த சீதோஷ்ண நிலையையும் கண்காணிக்கும் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரீஹரிகோட்டா:

ந்த சீதோஷ்ண நிலையையும் கண்காணிக்கும் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில்,  ‘ரிசாட்-2’ செயற்கைக் கோளை  அதிநவீன வசதிகளுடன் இஸ்ரோ தயாரித்திருந்தது. இந்த செயற்கை கோள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று அதிகாலை 5.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.  இந்தச் செயற்கைக் கோள் பூமியில் இருந்து 536 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.

‘ரிசாட்-2’ செயற்கை;க கோள் இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும். மேக மூட்டங்கள், பனி போன்ற எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக  செயல்படும்,  இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும் வகையிலும் தயாரிக்கப்பட்டு இருப்பதாக வும், புவி கண்காணிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்துக்கு உதவியாக உளவுப் பணிகளை மேற் கொள்ளும்

இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும். தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் என எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும்.  குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம், அசைவுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று(மே.22) காலை, 5.27 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் நேற்று துவங்கியது. இந்நிலையில், இன்று திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

‘ரிசாட் 2பி ஆர்1’ செயற்கைக் கோளின் எடை 615 கிலோ; இதன் ஆயுட் காலம் 5 ஆண்டுகள். இதில் உள்ள ரேடார் கருவிகள் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை.  சரியான பாதையில் பயணித்த ராக்கெட், ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க, ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள், தகுந்த பாதுகாப்புடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை கண்டுகளித்தனர்.

 

 

You may have missed