நிலவை நெருங்கியது சந்திரயான்-2; விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை 2-வது முறையாக மேலும் குறைப்பு

ஸ்ரீஹரிகோட்டா:

நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 நிலவை நெருங்கி உள்ளது.  அதிலுள்ள விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப்பாதை 2வது முறையாக மேலும் குறைக்கப்பட்டு உள்ளது.

சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டரின் சுற்று வட்டப்பாதையின் தூரம் இன்று அதிகாலை 3.42 மணிக்கு  2-வது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலன் 6 முறை புவியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தது. அப்போது, நிலவின் மேற்பரப்பு படங்களை எடுத்து அனுப்பியது. இதையடுத்து,  சந்திரயான்-2 விண்கலம் ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

இந்த நிலையில், ஆர்பிட்டரில் இருந்து நிலவில் தரை பகுதிக்கு செல்ல உள்ள விக்ரம் லேண்டரை தனியாக பிரிக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி, ஆர்பிட்டரில் இருந்து நேற்று முன்தினம் மதியம் 1.15 மணிக்கு விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தனியாக பிரித்தனர்.

இதையடுத்து, விக்ரம் லேண்டரின் உயரத்தை குறைத்து அது நிலவில் தரை இறங்க ஏதுவாக அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இன்று அதிகாலை (செப்டம்பர் 04, 2019) 03.42 மணிநேர ஐ.எஸ்.டி.யில் தொடங்கி திட்டமிட்டபடி, சந்திரயான் -2 விண்கலத்திற்கான இரண்டாவது டி-சுற்றுப்பாதை சூழ்ச்சி உள்நோக்கி உந்துவிசை முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. சூழ்ச்சியின் காலம் 9 வினாடிகள் என்று இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

விக்ரம் லேண்டரின் சுற்றுப்பாதை 35 கிமீ x 101 கி.மீ. சந்திரயான் -2 ஆர்பிட்டர் 96 கிமீ x 125 கிமீ சுற்றுவட்டப்பாதையில் சந்திரனைச் சுற்றி வருகிறது மற்றும் ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் இரண்டும் ஆரோக்கியமாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.

இந்த சூழ்ச்சியின் மூலம் விக்ரம் லேண்டரைத் தொடங்க தேவையான சுற்றுப்பாதை சந்திரனின் மேற்பரப்பை நோக்கி இறங்குகிறது. தற்போது  விக்ரம் லேண்டர் நிலவை நெருங்கி வருகிறது.

செப்டம்பர் 07, 2019 அன்று நள்ளிரவு  0100 – 0200 மணி அளவில் விக்ரம் லேண்டர் விண்ணில் இறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.