மின்னணு நுண்ணறிவு சாட்டிலைட் எமிசாட் ஏப்ரல் 1-ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

பெங்களூரு:

மின்னணு நுண்ணறிவு சாட்டிலைட் எமிசாட்டை ஏப்ரல் 1-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்புக்காக ஏவப்படும் இந்த சாட்டிலைட்டுடன், 28 மூன்றாம் நபர் சாட்டிலைட்டும் ஏவப்படுகிறது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டில் 3 வித்தியாசமான புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிஎஸ்எல்வி ராக்கெட்டில் முதலாவதாக 436 கிலோ எடை கொண்ட எமிசாட் 749 கி.மீ தொலைவுக்கான கோளப்பாதையில் இணைக்கப்படும்.

அதன்பின்னர் 28 சாட்டிலைட்களும் 504 கி.மீ ஒரே வட்டப்பாதையில் சுற்றும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி