மே 22ந்தேதி விண்ணில் பாய்கிறது: நாட்டின் பாதுகாப்பு பணிக்காக ‘ரிசாட்-2’ செயற்கை கோள்!

ஸ்ரீஹரிகோட்டா:

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், ராணுவத்தின் உளவுப் பணிகளுக்கான ‘ரிசாட்2பிஆர்1’  என்ற செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம்  மே 22-ம் தேதி விண்ணில் ஏவுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ராணுவத்தின் செயல்பாடுகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுக்கும் வகையில்   ‘ரேடார் இமேஜிங் சேட்டிலைட்’ (ரிசாட்-2பிஆர்1) என்ற நவீன செயற்கைக் கோளை 2009-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

இந்த செயற்கைகோல் இஸ்ரேல் நாட்டு உதவியுடன் தயாரிக்கப்பட்டு செலுத்தப்பட்டது. தற்போது வரை இந்த செயற்கைகோள் தனது பணியை செய்துவருகிறது.

இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில்,  ‘ரிசாட்-2’ செயற்கைக் கோளை  அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயற்கைக்கோளை வரும் 22-ம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்த உள்ளது. பிஎஸ்எல்சி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும்  இந்தச் செயற்கைக் கோள் பூமியில் இருந்து 536 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.

‘ரிசாட்-2’ செயற்கை;க கோள் இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் மேக மூட்டங்கள், பனி போன்ற எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக  செயல்படும் வகையிலும் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும், புவி கண்காணிப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பில் ராணுவத்துக்கு உதவியாக உளவுப் பணிகளை மேற்கொள்ளும்.

இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் எல்லைப் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்கும். தெற்காசிய கடல் பகுதிகளில் கப்பல்கள், போர் விமானங்கள் ஊடுருவல் என எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும்.  குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட இந்திய எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் நடமாட்டம், அசைவுகளை கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

அத்துடன்  இந்தச்செயற்கைக் கோளை பேரிடர் மேலாண்மைக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே ராணுவ பாதுகாப்பு பணிக்காக  மைக்ரோசாட் – ஆர், எமிசாட் ஆகிய 2 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி நிலைநிறுத்தி உள்ளது. அந்த வரிசையில், ‘ரிசாட் – 2பிஆர்1’என்ற நவீன ரேடார் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி – சி46 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் வரும் 22-ம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த ரிசாட் செயற்கைக் கோள் 1,265 கிலோ எடை கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள நவீனரே டார் கருவிகள் மூலம் எந்தவிதமான சீதோஷ்ண நிலையிலும் துல்லியமான படங்களை எடுக்க முடியும். விண்ணில் தொடர்ச்சியாக சுற்றிவரும் இது, எந்த ஒரு இடத்தையும் ஒரே நாளில் 3 முறைக்கு மேல் படம் பிடிக்கக்கூடியது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ISRO to launch, May 22, RISAT-2BR1, Sriharikota
-=-