ஸ்ரீஹரிகோட்டா

ஸ்ரோ வெள்ளி கிரகத்தை அடுத்ததாக ஆய்வு செய்ய திட்டமிட்டுளதாக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு நிலையத்தில் யுவிகா 2019 என்னும் பயிற்சி முகாம் ஒன்று நடைபெற்று வருகிறது. அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த முகாமில் விண்வெளி ஆய்வு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாமை நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

சிவன் தனது உரையில் “சந்திராயன் விண்கலம் வரும் ஜூலை மாதம் செலுத்தப்பட உள்ளது. அதன் பிறகு சூரியன் ஆய்வும் அதை அடுத்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டம் உள்ளது. அதற்கும் அடுத்தபடியாக வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய உள்ளோம். இதற்காக 20 விண்கலன்களை அடுத்தடுத்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நமது ஆய்வுக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

தற்போது சூரியன் மற்றும் செவ்வாய் கிரக சோதனைக்கான விண்கலன்கள் வடிவமைப்பு முடிந்துள்ளது. மற்ற விண்கலன்களின் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய திட்டம் உள்ளது.” என தெரிவித்தார்.

வெள்ளி கிரகம் என்பது பூமியின் இரட்டை சகோதரி என அழைக்கப்படுகிறது. இந்த இரு கிரகங்களும், எடை, அளவு, உட்பொருட்கள், ஈர்ப்பு விசை, அடர்த்தி ஆகிய அனைத்து இனங்களிலும் ஒன்று போலவே இருப்பதால் இந்த பெயர் வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெள்ளி கிரகத்தின் மேல் பரப்பு, விண்வெளி ரசாயனம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.