சிட்னி:

ர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) சார்பில், ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சிட்னியில நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்,  ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் சுடும் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட்டிக்க 6 பேர் தகுதி பெற்ற நிலையில், இறுதி போட்டியின்போது,  29 புள்ளிகள் குவித்து இந்திய வீரர் அனிஷ் பான்வாலா  தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அதைத்தொடர்ந்து 27 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை சீன வீரர் செங் ஜிபெங்கும்,  ஜூமிங் 23 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

அதுபோல, மற்றொரு போட்டியில்,   அனிஷ் பான்வாலா, அன்ஹாத் ஜவந்தா, ராஜ்கன்வார்சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி (1,714 புள்ளிகள்) வெள்ளிப்பதக்கமும் வென்றது.

சந்து, ஜெப்தேஷ்சிங் ஜஸ்பால், மன்தீப்சிங் ஆகியோர் அடங்கிய மற்றொரு இந்திய அணி வெண்கலப்பதக்கம் பெற்றது.

உலக துப்பாகி சுடுதல் போட்டி  பதக்கப்பட்டியலில் சீனா 7 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் தொடர்ந்து வருகிறது.

ஏற்கனவே சமீபத்தில்,  மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்தியா சார்பாக கலந்துகொண்ட தமிழக வீராங்கனையான  இளவேனில் வலரிவன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.