துப்பாக்கிச் சுடுதல் போட்டி: ஜித்துராய் புதிய உலக சாதனை

டில்லி,

டில்லியில் நடந்து வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜித்துராய் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் பெற்றுள்ளது.

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஜித்துராய் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மற்றொரு போட்டியான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ஹீனா சித்து, ஜித்து ராய் அணி தங்கப்பதக்கம் வென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நடந்த ஆண்களுக்கான 50 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஜித்துராய், அமன்பிரீத்சிங் உள்ளிட்டோர் முன்னேறினர்.

இதில் ஜித்துராய் 230.1 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 

226.9 புள்ளிகள் பெற்று அமன்பிரீத்சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து ஈரானின் வாகித் 208 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இதுவரை 6 பதக்கம் பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ISSF World Cup, Jittu rai new world recored, துப்பாக்கிச் சுடுதல் போட்டி: ஜித்துராய் புதிய உலக சாதனை
-=-