உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் சவுரப் சௌத்ரி தங்கம் வென்று அசத்தல்!

டெல்லியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

qwqe

ஐ.எஸ்.எஸ்.எஃப் எனப்படும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உத்திரப்பிரதேச மாநிலம் மிீரட்டை சேர்ந்த சவுரப் சௌத்ரி ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்றார்.

16வயதான சவுரப் சௌத்ரி தன்னுடன் பங்கேற்ற செர்பியா விரர் டாமிர் மைகெக்கை பின்னுக்கு தள்ளி 245 புள்ளிகளில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன் மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் இறுதிச் சுற்றில் அதிக புள்ளிக்கள் பெற்ற வீரர் என்ற உலக சாதனையையும் சவுரப் புரிந்துள்ளார். 1.4 புள்ளிகள் இதற்கு முந்தைய உலக சாதனையையும் சவுரப் சௌத்ரி முறியடித்துள்ளார்.

சொந்த மண்ணில் தங்கம் வென்ற சவுரப் சௌத்ரி கடந்த ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தது. அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதை சவுரப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேபோன்று, நேற்று பெண்கள் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் போட்டியி பங்கேற்ற அபூர்வா தங்கம் வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.