கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

--

சென்னை:

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.   – பல்கலை. துணைவேந்தர் திலகர் இதை வெளியிட்டார்.

திலகர்

தரவரிசையில் மாணவி கிருத்திகா முதலிடம்    பெற்றார். முறையே, சௌமியா – 2ம் இடமும், ஆர்த்தி – 3ம் இடமும் பிடித்தனர்.

கால்நடை மருத்துவ படிப்பில் இந்தாண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு 5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று  துணைவேந்தர் திலகர் அறிவித்தார்.

மேலும், “கலந்தாய்வு அடுத்தமாதம் (ஜூலை) 19-ந் தேதி தொடங்கி 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறும். மொத்தம் 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர், கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டில் விண்ணப்பித்து உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.  இந்த ஆண்டு புதிய படிப்பு எதுவும் இல்லை. அதேபோல புதிய கல்லூரிக்கும் வாய்ப்பு இல்லை. தனியார் கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமும் இல்லை” என்றும் திலகர் தெரிவித்தார்.