சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சுமார் 60ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ந்தேதி ஊரகப்பகுதிகளுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் நேற்றுடன் ஓய்வடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள இடங்களில், வாக்குப்பதிவு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கான  ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு இன்று பணி உத்தரவு வழங்கப்பட்டதும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். முதல் கட்ட வாக்குப் பதிவில் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் முதல் கட்டத் தேர்தலில் தங்களது வாக்குரிமையைச் செலுத்தவுள்ளனர்.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள  முதல்கட்ட தேர்தலில், 4 ஆயிரத்து 700 ஊராட்சி தலைவர்கள், 37 ஆயிரத்து 830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 260 மாவட்ட வார்டு உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நான்கு பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுவதால் வாக்குப் பதிவின் போது நான்கு வகையான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.