கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

இஸ்தான்புல்:

துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  35 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்டவர்களில் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய சிலர், “இரு நபர்கள் கூட்டத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். அழர்களில் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா (சன்டா கிளாஸ்) வேடம் அணிந்திருந்தான்” என்று தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 35, Istanbul. terror .attack. 35. killed . gunman .'dressed . Santa', Turkey, world, உலகம், கிறிஸ்துமஸ், தாத்தா, துப்பாக்கிச்சூடு, துருக்கி, பலி, பேர், வேடம்
-=-