கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பன்னீர்செல்வம்.
கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடித்த கருப்பன் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் அடுத்த படம் ஐஸ்வர்யா முருகன்.
கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவும், ஜான் ஆபிரகாம் என்பவரின் படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர்
ஜி.ஆர். வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் இந்த படத்தை தயாரிக்கின்றனர். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிடுகிறது.


இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்த போஸ்டரை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்கையில், காதல் கலந்த ஆக்ஷன் படமாக இருக்குமென்றும், ரேணிகுண்டா படம் போல் இருக்கக்கூடும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.