ஐஸ்வர்யா ரஜினி… ஐநாவில் பரத நாட்டியமாடும் முதல் கலைஞர்!

சென்னை:

ஐநாவில் பரதநாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்குக் கிடைத்துள்ளது.மார்ச் 8 ம் தேதி உலகமகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்திய கலாச்சாரத்தை பரப்பும் வகையில் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வரியா  பரதநாட்டியம்  ஆடுகிறார்.  இதன்மூலம் ஐநாவில் பரதநாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமை ஐஸ்வர்யாவுக்கு கிடைக்கிறது.

இந்தியாவிலிருந்து முதல்முறையாக ஐஸ்வரியா  அழைக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னர் இந்தியா சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடினார். பண்டிட் ரவிசங்கர், எல் சுப்பிரமணியம், ஜாகிர் ஹுசேன் ஆகியோர் ஐநாவில் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

 

ஆனால் முதல் முறையாக நடனம் ஆடப் போகும் இந்திய கலைஞர் ஐஸ்வர்யாதான். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.