டில்லி

ணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரூ 20 லட்சத்தை வங்கியில் செலுத்திய 2 லட்சம் பேர் அரசுக்கு இன்னும் விளக்கம் அளிக்காமல் உள்ளனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரூ. 5 லட்சத்துக்கு மேல் வங்கியில் செலுத்திய அனைத்துக் கணக்குகளையும் மத்திய அரசின் நேரடி வரித்துறை ஆராய்ந்து வருகிறது.   அதில் சுமார் 18 லட்சம் வங்கிக் கணக்குகளில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.     இவற்றில்  சுமார் 12 லட்சன் வங்கிக் கணக்குகள் இருதுவரை சரிபார்க்கப்பட்டுள்ளன.   அந்தக் கணக்குகளை சரிபார்த்ததில் முறைகேடு உள்ள கணக்கு தாரர்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

மீதமுள்ள கணக்குகளில் ரூ. 2.9 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.   இது மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் மதிப்பில் ஐந்தில் 1 பங்கு என கூறப்படுகிறது.    இந்த கணக்கு தாரர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.   அதில் இதுவரை 5 லட்சம் கணக்கு வைத்திருப்போர் பதில் அளிக்கவில்லை.   அதில் ரூ 20 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்துள்ளவர்கள் 2 லட்சம் பேர்கள் ஆவார்கள்.    அந்த 2 லட்சம் பேர்களில் 79000 பேர் ரூ, 50 லட்சத்துக்கு மேல் டிபாசிட் செய்தவர்கள் ஆவார்கள்.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், “செல்லாது என அறிவிக்கப்பட்ட ரு.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களை ரூ. 20 லட்சத்துக்கும்  மற்றும் அதற்கு மேல் செலுத்திய 2 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளோம்.  இதுவரை அவர்களிடம் இருந்து விளக்கமோ அல்லது வருடாந்திரக் கணக்கோ துறைக்கு அளிக்கப்படவில்லை.   நாங்கள் பல முறை அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை.”  எனத் தெரிவித்துள்ளார்.