வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக டிடிவி ஆதரவு புகழேந்திக்கு உத்தரவு

பெங்களூரு,

மிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடைபெற்றும் வரும் வருமான வரி சோதனையின் ஒரு பகுதியாக டிடிவியின் தீவிர ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சோதனை சசிகலாவின் மன்னார்குடி உறவினர்கள் அவர்கள் நண்பர்கள், அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்றும் 3வது நாளாக பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்கள்  நடத்தப்பட்ட  சோதனையில் ஏராளமான ஆவணங்கள், தங்க நகைகள், லட்சக்கணக்கான பணங்கள்  கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வரும் புகழேந்தி டிடிவியின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இவரது வீடு பெங்களூரு முருகேஷ்பாளையாவில் உள்ளது.

இங்கு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அதைத்தொடர்ந்து அவரை வரும் 13ந்தேதி  (திங்கட்கிழமை) சென்னை யில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.