சென்னை

மிழகத்தைச் சேர்ந்த இரு மதுபான உற்பத்தி நிறுவனங்கள் ரூ 700 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறாம் தேதி அன்று வருமான வரித்துறையினர் தமிழகத்தில் உள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்களில் சோதனை இட்டதாகச் செய்திகள் வெளி வந்தன.  இந்த சோதனி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் 55 இடங்களில் நடந்துள்ளன. அத்துடன் சென்னை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளும் சோதனை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர், “தமிழகத்தில் பீர மற்றும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது உற்பத்தி நிறுவனமொன்றில் சோதனை நடந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்த இந்த சோதனையில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தஞ்சை, மற்றும் கேரளா,ஆந்திரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் 55 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இதில் இந்த நிறுவனத்தின் முக்கிய ஊழியர்களின் வீடுகள் மற்றும்  இல்லங்களும் அடங்கும். இங்கிருந்து பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன, இதைப் போல் மற்றொரு நிறுவனமும் சோதனை செய்யப்பட்டது. இவர்கள் மூலப் பொருட்களின் விலையை அதிகரித்து பில் போட்டு வாங்கி உள்ளனர். அந்த பிலபடி தொகையை அளித்த பிறகு வாங்கிய நிறுவனங்கள் அதிகப்படியாகச் செலுத்தப்பட்ட பணத்தைத் தனி நபர் கணக்குகளுக்கு ஆன்லைன் மூலம் மாற்றி உள்ளன.

இது குறித்த அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளோம். இந்த மோசடியில் சுமார் ரூ. 700 கோடி வரையிலான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் இருந்துள்ளது. இதில் ஒரு நிறுவனம் ரூ. 400 கோடியும் மற்றொரு நிறுவனம் ரூ.300  கோடி வ்ருமானத்தையும் மறைத்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார். அவர் இந்த நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை எனினும் இந்த நிறுவனங்கள் எஸ் என் ஜே டிஸ்டில்லரிஸ் மற்றும் கல்ஸ் டிஸ்டில்லரிஸ் என அதிகாரப்பூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.