புனே

டி நிறுவன ஊழியர் சங்க மகாராஷ்டிர மாநில தலைவர் பவன்ஜித் மானே வாகெடுப்பை முன்னிட்டு தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குஏராளமான் ஐடி ஊழியர்கள் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் இருந்து பணி புரிகின்றனர். இந்த மாவட்டத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு தினங்களில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளன

இவர்களுக்காக ஃபோரம் ஃபார் ஐடி எம்ப்ளாயீஸ் என்னும் ஐடி ஊழியர் சங்கம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சங்கத்தின் தலைவர் பவன்ஜித் மானே என்பவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “புனே மாவட்டத்தில் ஏராளமான ஐடி ஊழியர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பணி புரிகின்றனர். இம்மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன.

ஊழியர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக தனியார் நிறுவனங்கள் அந்த இரு தினங்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பெரிய நிறுவனங்கள் இந்த இரு தினங்களிலும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பர்மிஷன் மட்டும் கொடுத்துள்ளன.

அதனால் ஊழியர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வாக்களிக்க இயலாத நிலை உண்டாகும். எனவே இந்த இரு நாட்களும் அனைத்து தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும். எங்கள் சங்கத்தில் உள்ள ஊழியர்களில் 50% க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கபடாம உள்ளது. ஆகவே அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த வேண்டுகோளை அனுப்பி உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.