வருமான வரி கணக்கு அளிக்க அளிக்க வேண்டிய படிவங்கள்

டில்லி

ந்த கணக்காண்டு 2018-19 ஆம் ஆண்டை ஒட்டி வருமான வரித்துறைக்கு அளிக்க வேண்டிய படிவங்கள் விவரம் வெளிவந்துள்ளன.

ஒவ்வொரு கணக்கு வருட முடிவிலும் அந்த ஆண்டுக்கான வருமானக் கணைக்கை அளித்து வரி செலுத்துவது குடிமக்களின் கடமையாகும். இந்த வருடத்திற்கான வருமானவரி கணக்கு படிவங்கள் குறித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அதன் படி வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ளவர்களும், பான் அட்டை வைத்திருப்பவர்களும் அளிக்க வேண்டிய படிவங்கள் குறித்த விவரம் வருமாறு :

ஐடிஆர் 1 படிவம் :

1. இந்த படிவமானது வருடத்துக்கு ஊதியம், வீட்டு வாடகை, வட்டி உள்ளிட்ட இனங்களின் மூலம் ரூ. 50 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்காகௌம்.

2. இந்தபடிவம் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் பங்கு தாரர்கள் ஆகியோருக்கு பொருந்தாது.

3. இந்திய நேரடி வரி விதிகளின் படி இந்த படிவம் அளிப்போருக்கு ரூ.40000 வரை வருமானத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள்து.

4. சொந்தமாக வீடு வைத்திருப்போர் அதை வாடகைக்கு விட்டுள்ளார்களா அல்லது தாங்களே குடி இருக்கிறார்களா என்பதை ப்டிவத்தில் தெரிவிக்க வேண்டும்.

5. இந்த வருடத்தில் இருந்து இந்த படிவத்தில் கணக்கு அளிப்போர் வங்கி வட்டிகள், வைப்புத் தொகையின் வட்டிகள் உள்ளிட்ட இதர வருமான கணக்குகளையும் அளிக்க வேண்டும்.

மற்றபடி சென்ற வருடத்தை போலவே இந்த வருடமும் ஊதிய விவரங்கள் அதாவது படிகள், வசதிகள் ஆகியவற்றை தனித்தனியே தெரியப்படுத்த வேண்டும். இதைத் தவிர மற்ற வருமானங்களில் விலக்கு இருந்தாலும் அந்த வருமானங்கள் குறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

 

ஐடிஆர் 2 படிவம் :

1. ஐடிஆர் 2 படிவம் தனிப்பட்ட நபர் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பம் உள்ளிட்டோருக்கு தொழில் மற்றும் வர்த்தக லாப வருமானம் இல்லாதோருக்கானது.

2. இந்த படிவத்தில் நீங்கள் உள்நாட்டினரா அல்லது வெளிநாடு வாழ் இந்தியரா என்பதை தெரிவிக்க வேண்டும்.

3. அத்துடன் நீங்கள் 182 நாட்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் வசித்துள்ளீர்களா என்பதயும் அப்படி இல்லை எனில் எத்தனை நாட்கள் இந்தியாவில் இருந்தீர்கள் என்பதையும் சரியாக தெரிவிக்க வெண்டும்.

4. உங்களிடம் வருமான வரித்துறை பட்டியலில் இல்லாத நிறுவனங்களின் பங்கு இருந்தால் நீங்கள் அந்த நிறுவனத்தின் பெயர், பான் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.