புரோ கபடி தொடர் – தமிழ் தலைவாஸ் அணிக்கு 12வது தோல்வி!

ஜெய்ப்பூர்: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பணயம் தோல்விப் பயணமாக அமைந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் தனது 12வது தோல்வியை சந்தித்தது.

இந்திய அளவில் புரோ கபடி லீக் தொடரின் ஏழாவது சீகன் தற்போது நடக்கிறது. இத்தொடரில் பங்குகொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 12. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 2 தடவைகள் மோதும்.

புள்ளிப்பட்டியலில் பிடிக்கும் இடங்களின் அடிப்படையில் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தற்போதைய நிலவரத்தில் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில், லீக் போட்டியொன்றில் உத்திரப்பிரதேச யோதா அணியைச் சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி, தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும், பின்னர் அடுத்தடுத்த நிலைகளில் மோசமாக தடுமாறி தோல்வியை தழுவியது. இந்தத் தோல்வியின் மூலம் அந்த அணி கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.