சென்னை:
தொகுதி பங்கீடு செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக உடனான தொகுதி உடன்பாடு திருப்தி அளிக்கிறது என்றார்.

இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்றும் வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்கலாடை தொகுதியும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் ஏற்றம்-இறக்கம் என்பது சகஜம் என்றும் கூறினார்.

தொகுதி பங்கீடு சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவிக்கையில், நம் கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். இதுவே வெற்றிக் கூட்டணி என்றார்.

இந்த தேர்தலிலே காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர்களுக்கும், புதிய முகங்களுக்கும் குறிப்பாக மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு செய்தும், சிறுபான்மையினருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.