விராத் கோலிக்கு ‘ஜில்’ வைத்த ஆடம் ஸம்பா!

லண்டன்: விராத் கோலி பேட்டிங் செய்வதையும், பயிற்சி செய்வதையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் என்று கூறி ‘ஐஸ்’ வைத்துள்ளார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா.

நடப்பு ஐபிஎல் தொடரில், கோலி தலைமையிலான பெங்களூரு அணிக்காக ஆடவுள்ளார் ஆடம் ஸம்பா. இந்நிலையில்தான், அந்த அணியின் கேப்டனுக்கு சளி பிடிக்கும் அளவிற்கு ஐஸ் வைத்துள்ளார்.

“ஐபிஎல் தொடர் எனக்கான நல்ல வாய்ப்பு. சாஹலுடன் இணைந்து பந்துவீசுகையில், புதிய விஷயங்களை பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள முடியும். இக்கட்டான நேரங்களில் பந்துவீசுவதை நான் விரும்புவேன்.

விராத் கோலி பயிற்சி செய்வதையும், பேட்டிங் செய்வதையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவருடன் இணைந்து ஆடுவது ஒரு சிறந்த அனுபவம்” என்றார் ஆடம் ஸம்பா.