மும்பை: கடந்த 1996ம் ஆண்டிற்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஒன்றில், நான்காவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் முகமது ஷமி.

கடந்த 1996ம் ஆண்டு இந்தியாவில் இந்த சாதனையைச் செய்திருந்த வேகப்பந்து வீச்சாளர் தென்னாப்பிரிக்காவின் லேன்ஸ் க்ரூஸ்னர்.

விசாகப்பட்டணம் டெஸ்டின் கடைசி நாளில், தென்னாப்பிரிக்க அணியின் 5 விக்கெட்டுகளை காலிசெய்து இந்தியாவின் வெற்றிக்கு பெரிய உறுதுணையாக இருந்தார். இவர் எடுத்த 5 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் பவுல்டு முறையிலானவை.

அதில் 3 விக்கெட்டுகள் மிகவும் முக்கியமானவை. மேலும், ஷமியின் 5/35 என்ற பெர்ஃபார்மன்ஸ் வேகப்பந்து வீச்சு என்ற வகையில், நான்காவது இன்னிங்ஸில், 6வது சிறந்த பெர்ஃபார்மன்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது.

லேன்ஸ் க்ளூஸ்னர் கடந்த 1996ம் ஆண்டில் 8/64 விக்கெட்டுகளையும், ஸ்ரீநாத் அதே ஆண்டில் 6/24 விக்கெட்டுகளையும், கடந்த 1974ம் ஆண்டில் ஹோல்டர் 6/39 விக்கெட்டுகளையும் நான்காவது இன்னிங்ஸில் கைப்பற்றியிருந்தனர். மேலும், இந்தியாவின் மதன்லால்(1981) மற்றும் கர்சான் காவ்ரி(1977) ஆகியோரும் இந்தச் சாதனையை செய்தவர்கள். தற்போது அந்த வரிசையில் ஷமியும் இணைந்துள்ளார்.