ஷார்ஜா: கடும் வெப்பநிலை காரணமாக, களத்தில் அதிகநேரம் நின்று பேட்டிங் செய்வது கடினமாக உள்ளதென கூறியுள்ளார் மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா.

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 80 ரன்களை விளாசினார் ரோகித்.

அவர் கூறியதாவது, “கடும் வெப்பம் காரணமாக, நீண்டநேரம் பேட்டிங் செய்ய நான் திணறினேன். அதேநேரம் வெற்றிப் பாதைக்கு திரும்பியதை நினைத்து மகிழ்ச்சி. ஃபார்மில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேன் நீண்டநேரம் களத்தில் நிற்க வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டோம்.

கடந்த 6 மாதங்களாக எந்தப் போட்டியிலும் விளையாடாத காரணத்தால், ரன் சேர்க்க சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டேன். அது முதல் போட்டியில் கைகொடுக்காத நிலையில், இரண்டாவது போட்டியில் கைக்கொடுத்தது. இப்போட்டியில், எங்கள் பந்துவீச்சாளர்கள் பும்ரா, பேட்டிசன் மற்றும் பெளல்ட் ஆகியோர் நம்பிக்கையளித்தனர்” என்றுள்ளார்.