மும்பை: எப்படி விசாரணை செய்வது என்று புலனாய்வு நிறுவனத்திற்கு அறிவுரை வழங்குவது மீடியாக்களின் வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் நடத்தப்பட்ட ‘மீடியா விசாரணை’ யை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்தபோது, இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.
தலைமை நீதிபதி திபன்கார் தத்தா, நீதிபதி ஜிஎஸ் குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தப் பொதுநல மனுவை விசாரித்தது.
“புலனாய்வு அமைப்பிற்கு ஆலோசனை வழங்குவது மீடியாவின் வேலையா? விசாரணையில் தனது அறிவைப் பயன்படுத்துவது புலனாய்வு அதிகாரியின் கடமையாகும்” என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
விசாரணையில் ஈடுபட்ட செய்திச் சேனலின் சார்பாக ஆஜரான வழக்கறஞர் மால்விகா திரிவேதியிடம் இக்கேள்வியைக் கேட்டனர் நீதிபதிகள்.
மீடியாவின் செயல்பாட்டிற்கான வரையறை என்பதில் தீர்மானிக்கப்பட்ட எல்லை இருக்கிறதா? ஹத்ராஸ் வழக்கில் என்ன நடந்தது? அதில், மீடியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கவில்லையா? என்று வாதாடினார் மால்விகா திரிவேதி.