ஜெனிவா: ஆப்ரிக்க கண்டத்தில் கெரோனா வைரஸ் தொற்று ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்றும், அடுத்த சில மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

ஆப்ரிக்க நாடுகளில் கொரோனா தொற்று வீரியம் தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால், தற்போது தொற்று எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆரம்பகட்ட விகிதத்தை ஒப்பிடுகையில், கடந்த 10 நாட்களில், பாதிப்பானது, 40% திடீரென கூடியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 28000 என்பதாகவும், பலி எண்ணிக்கை 1300 என்பதாகவும் அதிகரித்துள்ளது.

அடுத்த 3 முதல் 6 மாதங்களுக்குள், ஒட்டுமொத்த ஆப்ரிக்க கண்டத்தில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதேசமயம், அதிகாரிகளால் மரண எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.

“ஆப்ரிக்க கண்டத்தில், நாம் தற்போது துவக்க நிலையில் இருக்கிறோம்” என்று உலக சுகாதார அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளது.