மேட்ரிட்: ஐரோப்பாவின் பார்சிலோனா கிளப் அணியில் பங்கேற்று விளையாடி வரும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, இருவிதமான சாதனைகளைப் புரிந்துள்ளார்.

தற்போதைய நிலையில், பார்சிலோனா கிளப் அணிக்காக, மொத்தம் 750 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும், ‘லா லிகா’ அரங்கில் பார்சிலோனாவுக்காக 500 போட்டிகளில் பங்கேற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

ஏற்கனவே, ஸ்பெயின் நாட்டின் சேவி, பார்சிலோனா அணிக்காக மொத்தம் 767 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் மேலும், லா லிகா அரங்கில், பார்சிலோனாவுக்காக 505 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இன்றைய நிலையில், பார்சிலோனா கிளப் அணியின் வெற்றிகரமான வீரராக மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.