புதுடெல்லி:

எந்த படைவீரர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் படுகொலை செய்தார்களோ, அதே சிபிஆர்எஃப் படையைச் சேர்ந்த வீரர்கள்தான் பாகிஸ்தான் தூதரகத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உணர்ச்சிப் பெருக்கை விட, கடமை முக்கியம் என நிரூபித்திருக்கிறார்கள் நம் வீரர்கள்.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் நமது சிபிஆர்எஃப் படைவீரர்கள் 39 பேரை, ஃபாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு கார் குண்டு மூலம் தாக்கி படுகொலை செய்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நேரடியாக ஆதரவு தருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு 40-க்கும் மேற்பட்ட சிபிஆர்எஃப் வீரர்கள் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர். நாங்கள் கோபமாகத்தான் இருக்கிறோம். எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடமை முக்கியமல்லவா? என்கின்றனர் அங்கு பாதுகாப்புக்கு நிற்கும் வீரர்கள்.

நாங்கள் படை வீரர்கள். நாங்கள் யார் மீது கோபப்படுகிறோமோ, அவர்களையும் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை என்றனர்.