மெல்போர்ன்: எலும்பும் தோலுமாக காணப்பட்ட இந்திய அணியிடம், ஆஸ்திரேலியா தோற்றதை ஜீரணிக்க முடியவில்லை என்று புலம்பியுள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் நிரந்தர கேப்டன் விராத் கோலி இல்லை. அந்த அணியின் 7 முன்னணி வீரர்கள் காயத்தால் விலகினர். எனவே, அந்த அணியில் ஒட்டுமொத்தமாக இருந்த 20 வீரர்களும் களத்தில் இறங்கினர்.

அது இந்திய ‘ஏ’ அணி போலத்தான் காட்சியளித்தது. கடந்தமுறை இந்திய அணி இங்கு கோப்ப‍ை வென்றபோது, ஆஸ்திரேலியாவில் ஸ்மித் & வார்னர் போன்றவர்கள் இல்லை. ஆனால், இப்போது அனைத்து முன்னணி வீரர்களும் அணியில் இடம்பெற்றிருந்தனர்.

ஆனாலும், இந்திய ஏ அணியிடம், வலிமைவாய்ந்த ஆஸ்திரேலியா, அதுவும் பிரிஸ்பேனில் தோற்றதை ஒருபோதும் ஏற்கனவே முடியாது. வலைப் பயிற்சியில் பந்துவீசுவதற்காக அழைத்து வரப்பட்ட வீரர்களை வைத்து இந்தியா ஜெயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி அந்தளவிற்கு மோசமாகிவிட்டதா? ஆனாலும், இந்திய அணியைப் பாராட்டுகிறேன். அவர்கள் இந்தப் பெருமைக்குப் பொருத்தமானவர்களே..!” என்றுள்ளார் பாண்டிங்.