காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மாயமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் வணிகம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதான கருத்தை தெரிவித்துள்ளனர் சில தொழில் முனைவோர்கள்.

அவர்கள் கூறுவதாவது; வணிகத்தில் பங்குபெற்றுள்ள பல்வேறான பங்குதாரர்கள், வணிக நடவடிக்கைகள் மற்றும் நிறுவனர்களின் மீது பலவாறான அழுத்தங்களை சுமத்துகிறார்கள்.

தொழில்முனைவோர்கள் இப்படி பலவிதமான பங்குதாரர்கள் மட்டுமல்ல, முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறான அரசு அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து விதவிதமான நெருக்கடிகளை சந்திக்கிறார்கள்.

இப்படியான ஒரு நிறுவனத்தில் எந்தளவிற்கு விரைவான முறையில் ஒருமித்த முடிவுகள் எடுக்கப்படுகின்றனவோ, அந்தளவிற்கு அந்த நிறுவனத்தின் இயக்கம் இலகுவாக அமையும். இதில் பல்வேறான அரசு அமைப்புகளை சமாளித்து அவற்றின் விதிமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு ஈடுகொடுத்து செல்வது ஒரு தொழில்முனைவோருக்கு அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை என்கின்றனர்.

சித்தார்த்தா எழுதிய கடிதத்தில்கூட, வருமான வரித்துறை, தனியார் பங்குகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து தனக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் வந்ததை குறிப்பிட்டுள்ளார்.