தெலுங்கு நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லையாம் ; அது ‘ரோகா’வாம்…..!

தெலுங்கு நடிகர் ராணா கடந்த 12ம் தேதி தான் மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார். அந்த ட்வீட்டை பார்த்து பலரும் வியந்தார்கள்.

இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது போன்ற  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் ராணா.

இந்நிலையில் ராணா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த தெலுங்கு நடிகர் நானி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா என்று அவரிடம் வாட்ஸ் ஆப்பில் கேட்டார். அதற்கு ராணா இல்லை ரோகா தான் நடந்தது என்றார்.

ரோகா என்றால் இரு வீட்டாரும் சந்தித்து நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு தேதிகளை முடிவு செய்வார்கள். ஆக, ராணாவுக்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை.

கார்ட்டூன் கேலரி