டில்லி,

சிகலாவுக்காக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினை காரணமாக தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு கோஷ்டியினரும் திரண்டுள்ளனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தனக்கே உள்ளது. அவர்கள் என்னை சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்துள்ளனர். எனவே தன்னை முதல்வராக பதவியேற்ற அழைப்பு விடுக்க வேண்டும் என  தமிழக பொறுப்பு கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

தற்போதைய காபந்து முதல்வரான ஓபிஎஸ், தான் மிரட்டப்பட்டு கையெழுத்து பெறப்பட்ட தாகவும், தனது ராஜினாமாவா வாபஸ் பெறுவதாகவும் கவர்னரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் சசிகலாவுக்கு ஆதரவான எம்.பிக்கள் சிலர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க மத்திய அரசு தடையாக உள்ளது. கவர்னர் தாமதம் செய்கிறார். எனவே,  சசிகலாவை பதவியேற்க அனுமதிக்க வேண்டும் என  சொல்லி பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக எம்பிக்களின் இத்தகைய போக்கு தமிழக மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை, ரெயில்வே அறிவிப்பில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது இதுபோன்ற எவ்வொரு பிரச்சினைக்காக வும் இதுவரை குரல் கொடுக்கவில்ல.

தமிழகத்தின் ஜீவாதாரண பிரச்சினையான காவிரி பிரச்சினை, விவசாயிகள் மரணம் பற்றிய பிரச்சினை, தமிழக மீனவர்களின் வாழ்வா சாவா பிரச்சினை, கேரளா மற்றும் ஆந்திரா தமிழக பாசன வழிகளில் தடுப்பணை கட்டி வரும் பிரச்சினை, ரூபாய் நோட்டு பிரச்சினை,

கடந்த ஆண்டு இறுதியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய வார்தா புயல்..  தற்போது, தமிழக பிளஸ்2 மாணவர்களின் மருத்துவர் கனவை தடுக்க வந்திருக்கும் நீட் நுழைவு தேர்வு பிரச்சினை…..  

இதுபோன்ற எந்தவொரு தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்காத அதிமுக எம்.பி.க்கள்,

தற்போது உள்கட்சி பிரச்சினை காரணமாக,  சசிகலாவை முதல்வர் பதவியில் அமர வைப்பதற்காக பாராளுமன்றத்தையே முடக்கி வருவது எந்தவிதத்தில் நியாயம்.

தமிழகத்தின் எந்தவொரு நலன்களுக்காகவும் எந்தவித குரலும் கொடுக்காத தமிழக அதிமுக எம்.பிக்கள், தனி ஒருவருக்காக  பாராளுமன்றத்தையே நிலைகுலைய செய்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.