முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டா, இர்ஃபான் பதான் கூறுகையில் “நான் என்னுடைய ஒரு தனிப்பட்ட கதையிலிருந்து துவங்குகிறேன். நான் நட்பு அடிப்படையிலான ஒரு பயணமாக லாகூருக்கு ராகுல் ட்ராவிட், எல் பாலாஜி, பார்த்திவ் படேல் ஆகியோருடன் சென்றிருந்தேன். அங்கு 1500 மாணவர்கள் அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தில் என்னை நோக்கி கேள்வி கேட்கப்பட்ட போது ஒரு மாணவி என்னிடம் ஒரு கேள்வியை ஏறக்குறைய கோபத்துடன் கேட்டார்.

நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தும் ஏன் இந்தியாவுக்காக விளையாடுகிறேன் என்பதே அந்த கேள்வி. நான் எழுந்து  இந்தியாவுக்காக விளையாடுவதால் நான் ஏதும் இந்தியாவுக்கு உதவி செய்யவில்லை. அது என்னுடைய நாடு, அதனை பிரதிநிதிக்கும் அதிஷ்டத்தையும் பெருமையையும் அடைகிறேன். எனது மூதாதையர்கள் வந்த இடமான இதுவே எனது அரசு, என்னுடைய நாடு என்றேன். அந்த கல்லூரியே கைதட்டியது.

இதுபோன்று நான் பாகிஸ்தானில் ஒரு வெளிப்படையான கூட்டத்தில் நெஞ்சம் நிமிர்த்திக் கூற முடியுமாயின் எனது நாட்டில் நான் நினைப்பதைக் கூற நான் யாருடைய அனுமதியையும் கோர வேண்டியதில்லை.நான் என் நாட்டைப் பிரதிநிதிக்கிறேன். மக்களில் சிலர் இதை புரிந்து கொள்ள வேண்டும். நான் பந்து வீசுவதற்காக ஓடிக் கொண்டிருக்கும் போது என்னை ஒரு இஸ்லாமியன் என்று நினைத்து ஓடிக் கொண்டிருக்கவில்லை. மற்றவற்றிற்கெல்லாம் முதலில் நான் ஒரு இந்தியன்.

நான் என் ட்வீட்டரில் என்ன சொலியிருக்கிறேன் என்றால் அரசியல் குறைகூறல் என்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் ஆனால், நானும் எனது நாடும் #ஜாமியாமிலியா #ஜாமியாபோராட்டம் குறித்து கவனம் கொண்டிருப்போம் என்பதே அது. இதில் ஏதும் தவறுள்ளதா? இதில் ஏதும் வெறுப்புணர்வின் வெளிப்படுத்துதல் உள்ளதா?

எப்போதும் ஒரு விஷயத்திற்கு இரண்டு பக்க வாதங்கள் இருக்கும், இரண்டுமே வலுவானதாக இருக்கும், நானிங்கு அதனை ட்வீட் செய்யவில்லை அமைதியான போராட்டங்கள் அடிப்படை உரிமை.  அந்த இடத்திற்கு கவனம் செல்வதால் உயிரிழப்புகள் ஏற்படாது, நிலைமை மோசமடையாது என விரும்பினேன்.

இவர்கள் நமது குழந்தைகள், நமது எதிர்காலம். ஜாமியாவின் பிள்ளைகள் நம்மவர்கள் இல்லையா? காஷ்மீர் மற்றும் குஜராத்தின் பிள்ளைகள் நம்மவர்கள் இல்லையா?  அவர்கள் அனைவரும் நம் பிள்ளைகளே.

நான் ட்வீட்டரிலும் ஊடகத்திலும்  சில காட்சிகளையும் படங்களையும் கண்டேன். பிறகு,மாணவர்கள் குறித்த எனது கவலையை வெளிப்படுத்த இது சிறந்த வழியென தீர்மானித்தேன். அவர்கள் ஜாமியாவிலிருந்தோ ஐ ஐ எம் லிருந்தோ வந்தாலும், அவர்கள் நமது எதிர்காலம், நமது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்பவர்கள்.

நிச்சயமாக, எவருமே வன்முறையில் ஈடுபடக் கூடாது. மாணவர்கள் நமது எதிர்காலம் என்பதால் அவர்களுக்கு ஆதரவாயிருப்பது தவறில்லை. அவர்கள் ஏதாவது தவறு செய்தால், அவர்களை வழிக்குக் கொண்டு வர அமைதியான வழிகள் உள்ளன. அவர்கள் தவறேதும் செய்யாமல் அமைதியாக போராடுகிறார்கள் என்றால் அதில் எந்த தவறும் இல்லை.

சமூகத்தில் எனது அபிப்ராயத்தை வெளிப்படுத்தினால் அது தவறானதா? நான் செய்துள்ளேன். சமூக ஊடகாத்தின் யுகம் இது என்பதால் எதிவினை இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். கூடவே அதில் பல ஃபேக் அக்கவுண்ட் என்பதும் தெரியும்.

நான் பேசுவது தேவைப்படுகிறது என நினைத்தேன். பிறகு பேசத் துவங்கினேன். மற்றும் பலர் பேசத் துவங்கினர். சில நேரங்களில் ஒருவர் ட்வீட்டைத் துவங்க வேண்டியுள்ளது, பின்பு மற்றவர்கள் பின் தொடர்வர். பின்பு கவனம் அங்கு ஒருமுகப்படுத்தப்படும். யார் ஆரம்பிப்பது என்பதே பெரிய கேள்வி. நான் எப்போதும் புதிய பந்து கொண்டே பந்து வீசுவதை விரும்புவேன். நான் வெளிப்படையாக பேச வேண்டுமென நினைத்தேன், அவ்வாறே செய்தேன்.

நான் ட்வீட் செய்ததன் பின் பாகிஸ்தானில் நடந்தது ஞாபகதிற்கு வந்தது, நான் பாகிஸ்தானில் விக்கெட்டுகளை துவம்சம் செய்துள்ளேன், அவ்வாறே வெளியிலும் செய்துள்ளேன், எனது உள்நோக்கம் எனது சொந்த நாட்டில் கேள்விக்குள்ளாகியுள்ளது.

நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஐநாவில் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த போது டார்லிங் ஆனேன். இப்போது நான் அப்படியில்லை. நான் நமது சொந்த நாட்டின் குழந்தைகளைப் பற்றி பேசுகிறேன், அதில் தவறேதும் உள்ளதா?

நான் அடிக்கடி கேட்டுக் கொள்வதுண்டு பிரபலமானவர்கள் நாட்டில் நிலவும் விஷயங்கள் குறித்து பேச வேண்டுமா என்று. நான் எப்போதுமே அது தனிநபரின் முடிவு என நம்பினேன். அது சூழ்நிலையைப் பொருத்ததுமாகும்.

என் மனதில் உள்ளதாக இருப்பதனால் – வெறுப்பு செய்தியாகவும் அது இல்லாது இருப்பதனால் இதனை மக்கள் நேர்மறையாக எடுத்துக் கொள்வர். நீங்கள் எனது ட்வீட்டரில் எந்த வெறுப்பையும் காணமுடியாது. இம்ரான் கானைப் பற்றி பேசும் போது கூட நான் அமைதியைப் பற்றியே பேசியிருந்தேன். நான் எப்போதும் அமைதியையே ஆதரிப்பேன்.