“உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராக வேண்டிய தருணம் இது”

ஐதராபாத்: 1 ரன்னில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி கேப்டன் தோனி, இது உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய தருணம் என்றும், உலகக்கோப்பை முடிந்த பின்னர்தான் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது குறித்து யோசிக்க நேரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “நேற்றைய போட்டி மிகவும் சுவாரஸ்யமான ஒரு போட்டியாகும். கோப்பை இரு அணிகளுக்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தது. இரு அணிகளுமே நிறைய தவறுகளை செய்தோம்.

ஆனால், யார் சற்று குறைவான தவறுகளை செய்தார்களோ, அவர்கள் இறுதியாக வென்றுவிட்டார்கள். இப்போது, உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராக வேண்டியுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின்னரே, எங்களின் தவறுகளை திருத்திக் கொள்வது குறித்து யோசிப்பதற்கு நேரம் கிடைக்கும்” என்றார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை வீசிய மும்பையின் மலிங்கா, 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தன் திறமையை நிரூபித்தார்.