துபாய்க்கு ‘குட் பை’ சொல்லும் நேரமிது: பிரீத்தி ஜிந்தா

துபாய்: ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு ‘குட் – பை’ சொல்லும் நேரம் வந்துவிட்டது என்றுள்ளார் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களுள் ஒருவரான பிரீத்தி ஜிந்தா.

இத்தொடரில் பஞ்சாப் அணி, புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடம் பெற்றது, ஆனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறவில்லை. ஆனால், சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டது.

இந்நிலையில பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளதாவது, “ஐபிஎல் தொடர்பாக துபாய்க்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. நாம் எதிர்பார்த்தது போன்று இத்தொடர் அமையவில்லை. அதேசமயம், தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்து பதிலடி கொடுத்தோம்.

பலருக்கு த்ரில்லிங் கொடுக்கும் வகையில் பல போட்டிகள் அமைந்தன. எதிர்பார்த்ததைவிட, விரைவாகவே அனைத்தும் முடிந்துவிட்டது. தொடர்ந்து ணைந்திருந்து ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி” என்றுள்ளார் பிரீத்தி.