டில்லி

ந்தியாவில் மரபணு மாற்ற பருத்திக்கு அனுமதி தந்தவர் என்ற முறையில் அதற்காக வேதனைப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது  மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால்  விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பினால்,  அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்  இதற்கு தடை விதித்தார்.

 

அதேபோல பி.டி பருத்திக்கு அனுமதி வழங்கப்பட்டு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் நடந்தது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இவர்தான் மரபணு மாற்ற பருத்தியை அனுமதித்து கையெழுத்திட்டவர்.

அவர் பேசும்போது, “ மரபணு மாற்ற பருத்தியின் வருகை பல ஆயிரம் விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிட்டது. இதற்காக மிகவும் வருந்துகிறேன்.  மரபணு மாற்ற பருத்திக்கு அனுமதி தந்தவர் என்ற முறையில் அதற்காக வேதனைப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

பொறுப்பில் இருக்கும்போது தவறு எனத் தெரிந்தும் பல்வேறு அழுத்தங்களால் தவறான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு, ஓய்வு பெற்ற பிறகு வருத்தப்படுவது தொடர்வது வேதனைதான்