பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு: கமல்ஹாசன்

--

சென்னை:

மீபத்தில்  மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான  கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலகுமாரன் வீட்டுக்கு சென்ற நடிகர் கமல்ஹாசன்,  அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி யகமல், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு என கூறினார்.

மேலும் தனது சுற்றுப்பயணம் வாயிலாக மீனவர்களை பிரச்சினை  அரசு சரிவர கவனிக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் நிறைவேறாமலுள்ள திட்டங்களை நிறைவேற்றிவிட்டு, மேலும் புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றார்.

மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவறு  என கூறினார் .