துபாய்

றைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலைப் பெற இன்னும் 2-3 தினங்கள் ஆகலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் தேதி துபாயில் மரணம் அடைந்தார்.    முதலில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சொல்லப்பட்டது.  தற்போது மரண அறிக்கையின் மூலம் அவர் ஓட்டல் குளியல் அறையில் உள்ள குளிக்கும் தொட்டியில் விழுந்து மூழ்கி மரணம் அடைந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.    அவர் இரத்தத்தில் அந்த நேரத்தில் மது அருந்தி இருந்ததற்கான அடையாளமும் தெரிந்துள்ளது.

இந்நிலையில் அவரது உடலை பதப்படுத்தி இந்தியா எடுத்துச் செல்ல அரசு வழக்கறிஞர் இன்னும் அனுமதி வழங்கவில்லை.   தற்போது இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில்,

“ஸ்ரீதேவியின் மரணம் குறித்த ஊடகங்களின் ஆர்வம் புரிந்துக் கொள்ள முடிகிறது.  ஆனால் ஊடகங்களின் ஊகங்களினால் எந்தப் பயனும் இல்லை.

1.       நாங்கள் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு விரைவில் அனுப்பத் தேவையான முயற்சிகளை செய்துக் கொண்டு இருக்கிரோம்.

2.      நாங்கள் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடனும் அவர் நலம் விரும்பிகளுடனும் எங்களின் முயற்சியை எடுத்து உரைத்துள்ளோம்

3.       எங்களுடைய  முன் அனுபவத்தின் படி  இந்த நடவடிக்கைகள் முடிய 2-3 தினங்கள் ஆகும்.

4.       நாங்கள் மரணத்துக்கான காரணத்தை நிபுணர்கள் கண்டறிண்டு கூறும் வரை காத்திருப்போம்.   அது எங்களது பொறுப்பு.”

என குறிப்பிடப்பட்டுள்ளது.