விஜய் தாண்டியிருப்பது அரைக்கிணறுதான்.. அபாய மணி அடிக்கும்   வருமானவரித்துறை.. 

சென்னை

விஜய் வருமான வரி சோதனை குறித்து ஒரு வருமான வரி அலுவலர் தகவல் அளித்துள்ளார்

நடிகர் விஜய் வீடு, ஏ.ஜி.எஸ்.தயாரிப்பு அலுவலகம், பைனான்சியர் அன்புச்செழியன் வீடு  ஆகிய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஏகப்பட்ட ஆவணங்களையும் அங்கிருந்து அள்ளி உள்ளனர்.

;பிகில்’ மற்றும் மாஸ்டர் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளத்தைப் பகிரங்கப்படுத்திய வருமான அதிகாரிகளின் , நடவடிக்கை இதோடு நிற்கப்போவதில்லை.

என்ன நடக்கும்?

பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்த தகவல் இது:

‘’ மூன்று பேரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனையை முடித்து விட்டோம்.ஆனால் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நடந்து வரும்  ஆய்வு இன்னும் முடியவில்லை.
முதல் கட்ட ஆய்வில் ஆவணங்கள் தொடர்பாக எங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன.

விஜய் மற்றும் குடும்பத்தினர் செய்துள்ள முதலீடுகள் குறித்தே இந்த சந்தேகம். ஆவணங்கள் மற்றும் சில கணக்குகளை ஆய்வு செய்யும் பணியில் மும்முரமாக இருக்கிறோம்.கேள்வி எழும் வகையில் இந்த முதலீடுகள் இருப்பின், அதன் மீது வரிகள் விதிக்கப்படும்’’ என்று விஜய்க்குப் பேதி மாத்திரை கொடுத்துள்ளார், ஐ.டி.அலுவலர்.

 

கார்ட்டூன் கேலரி