டெல்லி மற்றும் பல்வேறு நகரங்களில் நகைக்கடைகளில் அரசு அதிகாரிகள் நடத்திய ரெய்டில் சுமார் 42 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் சிக்கியுள்ளதாக தெரிகிறது.

jwellery-fraud

ரூ.500, 1000 நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களிடம் உள்ள கறுப்பு பணத்தை தங்கமாக மாற்ற முயன்று வருவதாக தெரிகிறது. 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் தங்கம் வாங்குபவர்கள் தங்கள் பான்கார்டை காட்டித்தான் தங்கம் வாங்க முடியும் என்ற விதி இருப்பதால் பலரும் பல லட்சங்களுக்கு நகை வாங்கிவிட்டு வெறும் 2 லட்சத்துக்குள் நகை வாங்கியதாக மட்டும் பில் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.
அரசு அதிகாரிகள் இதனால் நவம்பர் 7-க்கு பிறகு செய்த வியாபாரங்களுக்கான பில்களை காட்டச் சொல்லி நகைக்கடைகளில் பரிசோதனை நடத்தினர். இப்பரிசோதனையில் சுமார் 42 கோடி மதிப்பிலான கணக்கில் வராத தங்கம் சிக்கியதாக தெரிகிறது. இதில் டெல்லியின் சாந்தினி சவுக் மற்றும் கரோல் பக் பகுதியில் மட்டும் 22 கோடி மதிப்பிலான தங்கம் சிக்கியது. டெல்லி மட்டுமன்றி சண்டிகர், ஜலந்தர் மற்றும் லுதியானா ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 600 நகைக்கடைகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
பான்கார்டு வாங்காமல் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்ட நகைக்கடை அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்றும் அவர்கள் யாரிடம் எவ்வளவு நகைகள் விற்றார்கள் போன்ற விபரங்களை தாங்கள் சேகரித்து வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரி ஹஷ்முக் ஆதியா என்பவர் தெரிவித்துள்ளார்.