வருமான வரி வருவாயை அதிகப்படுத்த துறை அதிகாரிகள் முன்வைத்துள்ள யோசனைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஏற்கனவே, மோடி அரசால் பலவீனமாக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரம் தற்போது பெரும் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. கிட்டத்தட்ட உலகப் பொருளாதாரத்திற்கே அந்த நிலைதான்.

இந்நிலையில், வரி வருமானத்தை வலுப்படுத்தும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் 10 வழிமுறைகளை முன்மொழிந்துள்ளார்கள். அதைப்பற்றி அலசுவதே இந்தக் கட்டுரை.

பணக்காரர்களுக்கு வரி விதித்தல்

பணக்கார வரி செலுத்துவோருக்கான கூடுதல் வரி விதிப்பு முன்மொழியப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் கட்டணம் 2020-21 நிதிநிலை அறிக்கையில் உயர்த்தப்பட்டிருந்தது. அதேசமயம், இந்த உயர்வை இரண்டு மாற்று முறைகளில் நடைமுறைப்படுத்த முடியும்.

அதாவது, முதலாவதாக, குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட காலத்திலும், இரண்டாவதாக, ரூ.5 கோடி வரையிலான சொத்து வைத்திருப்பவர்களுக்கு சொத்து வரியை மீண்டும் அறிமுகம் செய்தல்.

முதல் வகையின் மூலம், ரூ.1 கோடி வரையிலான மொத்த சொத்து வைத்திருப்பவர்களிடமிருந்து, தற்போது 30% என்பதாக கிடைக்கும் வருவாய், 40% என்ற அளவில் கிடைக்கும்.

இந்தியாவிலிருந்து ஊதியம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரி

இந்தியாவில் தங்களின் கிளையை வைத்திருக்கும் அல்லது நிரந்த உற்பத்திக் கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான வரியை அதிகப்படுத்துவது.

தற்போதைய நிலையில், அந்த நிறுவனங்களின் வருவாய் ரூ.1 கோடியிலிருந்து ரூ.10 கோடிகள் வரை இருந்தால், 2% வரியும், ரூ.10 கோடிகளுக்கு மேல் வருமானம் அதிகரித்தால் 5% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விகிதம் நீண்ட நாட்களாக மாற்றப்படாமல் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட் நிவாரண வரி

இந்த வரி விதிப்பானது, அதாவது, ஒவ்வொரு வரி செலுத்துவோரின் மீதும் விதிக்கப்படுவதானது, கூடுதல் வருவாயை ஈட்டித் தரும். தற்போதைய நிலையில், அரசாங்கம், மருத்துவம் மற்றும் கல்வி வரியாக தலா 2% விதித்து வருகிறது. எனவே, தற்போது ஒருமுறை வரியாக 4% விதித்து, ஒட்டுமொத்த நிதி மூலதனத்தை அதிகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரூ.15,000 கோடி முதல் ரூ.18,000 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்டப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், சாதாரண மக்களை இந்த வரிவிதிப்பு பாதிக்காமல் இருக்க, ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் இந்த வரியை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்ஆர் நிதியை திருப்பிவிடல்

பெருநிறுவனங்கள் வழங்கும் சிஎஸ்ஆர் நிதிக்கான வரி ஊக்கத்தொகை, இந்தப் பேரிடர் காலத்திலும் நீட்டிக்கப்பட வேண்டுமென்பது வருமான வரித்துறை அதிகாரிகளின் முன்மொழிவு. மேலும், சிஎஸ்ஆர் வகைப்பாட்டின்கீழ், கொரோனாவைரஸ் தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, பிரிவு 37ன் கீழ், 2021ம் நிதியாண்டிற்கான வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதேசமயம், அந்த நிறுவனங்கள் கொரோனா தொடர்பான நிவாரணப் பணிகளை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். நிறுவனங்களுக்கான சலுகையின் பொருட்டு, சட்டப்பிரிவு 2 மற்றும் 37இல், திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதேசமயம், அலுவலகம் சாராத ஊழியர்களுக்கு, இந்த கொரோனா காலகட்டத்தில் வழங்கப்படும் ஊதியத்தை, சிஎஸ்ஆர் வகைப்பாட்டின் கீழ் சேர்த்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நிறுவனங்கள் சார்பில் பிரதமர் நிவாரண நிதி மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் தொகைகளை சிஎஸ்ஆர் வகைப்பாட்டில், 2021ம் நிதியாண்டில் மட்டுமின்றி, 2022ம் நிதியாண்டிலும் சலுகை வரம்பில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

என்எஸ்சி போன்று கொரோனா வைரஸ் சேமிப்பு சான்றிதழ் திட்டம்

கொரோனா வைரஸ் நிவாரணத்திற்கு நிதித்திரட்டும் வகையில், புதிய வரி சேமிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் தனிநபர்கள் மற்றும் பிரியாத இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இந்த வகைப்பாட்டில் மேற்கொள்ளப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு, கூடுதல் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது; அதாவது u/s 80C வகைப்பாட்டில் அது செய்யப்பட்டிருந்தால்.

முதலீடு செய்யப்பட்டத் தொகையானது, மொத்தம் 5 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்கப்பட முடியாது மற்றும் முதலீட்டாளர்களுக்கு அதற்கான வட்டியும் கணக்கிடப்படும். அதாவது, இந்த வட்டியானது, சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கு அரசினால் வழங்கப்படும் வட்டியை ஒத்ததாக இருக்க வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய ஆம்னஸ்டி திட்டம்

2020ம் ஆண்டிற்கான ‘விவாத் சி விஷ்வாஸ்’ திட்டம், தற்போதைய நிலையில், சச்சரவுடன் கூடிய கோரிக்கைகளை மட்டுமே உள்ளடக்குகிறது. ஆனாலும், நிலுவையிலிருக்கும் கோரிக்கையின் பெரும்பகுதி, சச்சரவற்ற, அடுக்குமுறைப்படுத்தப்பட்ட வகைப்பாட்டுடன் தொடர்புடையது.

எனவே, வசூலை ஊக்குவிக்கும் பொருட்டு, வருமான வரி சட்டப் பிரிவு 220(2)ன் கீழ், பகுதியளவு அல்லது முழுமையாக வட்டித் தள்ளுபடி கிடைக்கும் வகையில் ஆம்னஸ்டி திட்டத்தை அவர்கள் முன்மொழிந்துள்ளார்கள்.

முன்மொழியப்பட்ட நடுத்தர காலஅளவிலான நடவடிக்கைகள்

பரம்பரை அல்லது வாரிசுரிமை வரியை மீண்டும் அறிமுகம் செய்தல்:

பரம்பரை வரி என்பது, அதிகபட்சம் 55% மதிப்புகளுடன் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் விதிக்கப்படுகிறது. இந்தியாவில், 10% முதல் 85% வரையான விகிதத்தில் செலுத்தப்படும் வகையில், கடந்த 1985ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது இந்த வரி.

எனவே, தற்போதைய சூழலில், இந்த வரியை மீண்டும் அறிமுகம் செய்து, செல்வக் குவிப்பை தடுத்து, வரி அடித்தளத்தை விரிவாக்கி, பொருளாதார சமமின்மையை குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வரியானது, இறுதியாக, வரி விகித குறைப்பிற்கு இட்டுச் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் தொடர்பான முதலீட்டு லாபத்தை 10% அதிகரித்தல்

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பரம்பரை சொத்துக்களின் மூலம் திரட்டப்படும் முதலீட்டு லாபத்தில் 30% உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது அது 30% என்பதாக உள்ளது.

மேலும், நீண்டகால மற்றும் குறுகிய கால லாபத்தில் 20% உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், வெளிநாட்டுவாழ் இந்தியர்களுடைய வாழ்வின் பல கட்டங்களில், அவர்களுக்கான சொத்திலிருந்து, அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளின் மூலம் பல அனுகூலங்கள் கிடைத்து வருகிறது என்பதை அந்த அதிகாரிகள் குழு முன்வைக்கிறது.

சமன்பாட்டு வரியை செம்மையாக்குதல்

கூகுள் வரி என்றழைக்கப்படும் சமன்பாட்டு வரி, கடந்த 2016ம் ஆண்டினுடைய நிதிச் சட்டத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. வெளிநாட்டுவாழ் இந்தியர்களுடைய வணிகம் தொடர்பான குறிப்பிட்ட சேவைகள், பெரும்பாலும், விளம்பர வாய்ப்பு மற்றும் சேவைகளை வழங்கும் அம்சங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

2% வரி விதிக்கப்பட்ட இ-வணிக வழங்கல் மற்றும் சேவைகளின் மூலம் பெறப்படும் இ-வணிகத்தால் கிடைக்கும் அனுகூலத்தையும் உள்ளடக்கும் வகையில், சமன்பாட்டு வரியை விரிவாக்குவதற்கு, 2020ம் ஆண்டின் நிதி மசோதா முன்மொழிந்தது.

விட்டுக்கொடுத்தல் முகாம்

வசதியுள்ள சிலர், தங்களின் LPG சிலிண்டர் மானியத் தொகையை தாங்களாகவே முன்வந்து விட்டுக்கொடுப்பதுபோல், வேறுபல வரி சலுகைகளையும், வசதியுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து விட்டுக்கொடுக்க ஊக்குவிப்பது. உதாரணமாக, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1 வரிச்சலுகை வாய்ப்பையேனும் விட்டுக் கொடுக்கும் வகையில் அவர்களை ஊக்குவித்தல்.