வி வி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

சென்னை

வி வி மினரல்ஸ் நிருவனத்துக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையை தலைமையகமாக கொண்டு வி வி மினரல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் வைகுண்ட ராஜன். இந்த நிறுவன அலுவலகம் மற்றும் கிடங்குகள் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

வி வி மினரல்ஸ் நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளாக சரியான முறையில் வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. இதை ஒட்டி இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் விவி மினரல்ஸ் அலுவலகம் மற்றும் உள்ள இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நிறுவன உரிமையாளர் வைகுண்ட ராஜன் மற்றும் அவரது மகன் இல்லம், அலுவலகங்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் செனை நுங்கம்பாக்கம், திருவான்மியூர், திசையன்விளை ஆகிய இடங்களும் அடங்கும்.