ஒப்பந்ததாரர் செய்யாத்துரை அலுவலகத்தில் 4வது நாளாக சோதனை நீடிப்பு

சென்னை:

ரசு ஒப்பந்ததாரரான நாகராஜன் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று 4 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் அடிப்படையிலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாத்துரை என்பவர் அரசு ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், செய்யாதுரையின் எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக  கூறி, வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர். கடந்த 3 நாட்களாக நடந்த இந்த வருமானவரி சோதனையில் ரூ.180 கோடி, 105 கிலோ தங்கம், ரூ. 10 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை சிக்கியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் அடிப்படையில் இன்று 4-வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.