Random image

ஐடி ரெய்டு எதிரொலி: ‘கிறிஸ்டி’ நிறுவன நண்பர் நிறுவன கேஷியர் தற்கொலை முயற்சி…

சென்னை:

டந்த 2 நாட்களாக தமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு உணவு பொருட்களை சப்ளை செய்து வரும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு மேற்கொண்டு வந்தது. கிறிஸ்டி நிறுவன்ததின் நண்பர் நிறுவங்களில் சோதனை நடைற்றது.

இந்த நிலையில், திருச்செங்கோட்டில் கிறிஸ்டி நிறுவன உரிமையாளரின் நண்பரின் நிறுவனத்தில்  பணிபுரிந்து வந்த கேசியர் ஒருவர்  வருமான வரித்துறை விசாரணையின் போது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டி ஃப்ரைட் கிராம் என்ற நிறுவனம்  குமாரசாமி என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி கட்டாமல் முறைகேடு செய்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான  சென்னை திருவான்மியூரில் உள்ள  குமாரசாமியின் வீடு, அலுவலகம் உள்பட தமிழகம், கர்நாடக மாநிலங்களில் அநத நிறுவனத்துக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்றைய சோதனையின்போது, கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின்  நண்பருமான ஜெயப்பிரகாஷ்  என்பவரின் அக்னி பில்டர்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்தில்  கேசியராக   பணியாற்றி வரும் கார்த்திகேயனிடம் வருமான வரித்துறையினர் தனியாக அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, தனக்கு மயக்கம் வருவதாக கூறி விட்டு வெளியே வந்த கார்த்திகேயன் திடீரென முதல் மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார்.

இதனை கண்ட அதிகாரிகள்  அதிர்ச்சி அடைந்து, உடனடியாக கார்த்திகேயனை மீட்டு அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர்.  கார்த்திகேயனுக்கு முதுகு எலும்பில் அடிபட்டிருப்பதால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.