பா.ஜ.க.வின் தோல்வி பயத்தாலேயே வருமானவரி ரெய்டு : அகமது பட்டேல்

டில்லி :

பெங்களூருவில் குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஈகிள்டன் கோல்ப் ரிசார்ட்டில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா தேர்தல் வேட்பாளருமான அகமது பட்டேல் தெரிவித்துள்ளதாவது:

“ஒரே ஒரு ராஜ்யசபா இடத்தில் வெற்றி பெறுவதற்காக இதுவரை இல்லாத அளவிற்கு சூனிய வேட்டையில் பா.ஜ.க. இறங்கி இருக்கிறது.

பா.ஜ.க.வின் தோல்வி பயம், விரக்தி, ஏமாற்றத்தையே இந்த வருமானவரி ரெய்டு எடுத்துக் காட்டுகிறது.

எங்களது வெற்றியை தடுக்க இதுவரை குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு இயந்தி ரங்களையும் பயன்படுத்திய பா.ஜ.,க., தற்போது வருமான வரித்துறையை பயன்படுத்தி வருகிறது” என்று அகமது பட்டேல் தெரிவித்துள்ளார்.