சென்னையில் 2 ‘ஐடி’ நிறுவனங்களில் ‘ஐடி’ ரெய்டு: பரபரப்பு

சென்னை:

ரி ஏய்ப்பு புகாரின் பேரில் சென்னையில் 2 ஐடி (Information Technology)  நிறுவனங்களில் ஐடி (Income Tax) துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டை  மற்றும் சோழிங்கநல்லூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

மும்பையை தலைமையிடமாக கொண்ட டிரைஜின் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Trigyn technologies limited) நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு சென்னை தேனாம்பேட்டை மற்றும் சோழிங்க நல்லூரில் கிளை உள்ளது. அதுபோல  அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட இடங்களிலும் அலுவலகங்கள் உள்ளன.

நிறுவனத்தின் தேனாம்பேட்டை கிளை அலுவலகத்திலும், சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்திலும் இன்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடைபெற்றதாகவும், அலுவலகங்களில் உள்ள முக்கியமான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

வருமான வரித்துறையினரின் சோதனையால் அலுவலகத்திற்கு வந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.