‘காஸா கிராண்ட்’ கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு

சென்னை:

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்து வரும் பிரபல கட்டுமான நிறுவனமான காஸா கிராண்டில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூரை தலைமையிடமாக கொண்டுள்ள காஸா கிராண்ட்  கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு திடீரென வந்த  வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலகத்தின் வாயிலை மூடிவிட்டு, அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள காஸா கிராண்ட் அலுவலகம், மற்றும் அதன் உரிமையாளர்களின்  வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.