கடலூரில் லட்சுமி ஜூவல்லரி மேலாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு!!

கடலூர்:

கடலூரில் உள்ள லட்சுமி ஜூவல்லரி மேலாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, சிதம்பரம், காரைக்காலில் லட்சுமி ஜூவல்லரி செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் மேலாளராக பணியாற்றி வருபவர் தென்னரசு. இவரது வீடு கடலூரில் உள்ளது. தமிழகத்தில் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சமயத்தில் கடலூரில் தென்னரசு வீட்டில் வருமானவரித்துறை இன்று மாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மிஷின் தெருவில் உள்ள அவரது வீட்டில் 4 பேர் கொண்ட குழு சோதனை செய்துவருகிறது. புதுவை, சிதம்பரம், காரைக்காலில் உள்ள லட்சுமி ஜூவல்லரி கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

You may have missed