முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் ஐடி ரெய்டு! 

--

சென்னை,

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகள் மற்றும் கடைகள், உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர்.

ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக தமிழக காவல்துறை தொடர்ந்துள்ள வழக்கில், கைதாவில் இருந்து தப்பிக்க சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கரூரில் செந்தில்பாலாஜியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்பட  8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வீடுகளில் மத்திய அரசின் வருமான வரித்துறை குறிவைத்து ரெய்டு நடத்துவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.